A shortened version of weblog.

A shortened version of weblog.

ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

  • Tech News
  • 12 July 2022
  • 365 Views
  • Sathiyamoorthy V

TAFCOP இணையதளம் மூலம் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் புதிய மொபைல் எண்ணைப் பெறுவதற்கும், ஆதார் அட்டை அவசியம். ஆனால், ஒரு சிலருக்கு ஆதார் அட்டையுடன் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன? என்ற சந்தேகம் இருக்கும். உடனடியாக தெரிந்து கொள்வது எப்படி? என்ற கேள்வியும் இருக்கும். இதற்காக மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் ஆதார் எண்ணில் எத்தனை எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறியலாம். TAFCOP போர்டல் மூலம், உங்கள் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

தொலைத்தொடர்புத்துறை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள TAFCOP இணையதளம் மூலம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வசிக்கும் மக்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் விவரங்களை நொடிப்பொழுதில் அறிந்து கொள்ளலாம்.

ஆதார் மொபைல் எண்ணை எப்படி தெரிந்து கொள்வது?

1. முதலில் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

2. அங்கு சாட்பாக்ஸில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP என்பதைக் கிளிக் செய்யவும்.

3. இப்போது உங்களுக்கு வந்திருக்கும் ஒடிபியை பதிவு செய்ய வேண்டும்.

4. இதனை பதிவு செய்தவுடன் உங்கள் ஆதாரில் இருக்கும் மொபைல் எண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் மொபைல் எண் புகார் அளிப்பது எப்படி?

ஒருவேளை உங்கள் ஆதாரில் வேறொருவர் மொபைல் எண்ணும் இருந்தால் TAFCOP பக்கத்திலேயே புகாரும் அளிக்க முடியும். அந்தப் பக்கத்தில் ’This is not my number’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் ஆதாரில் இருந்து தேவையற்ற மொபைல் எண்ணை நீக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நீக்கிவிடலாம்.

RELATED POST

07 July 2022   |   Tech News
கார்கள், படகுகள், விமானங்களுக்கு இணையவசதி வழங்க ஸ்டார்லிங்கிற்கு ஒப்புதல்
Read More
06 July 2022   |   Tech News
டெலிகிராமின் அதிரடியான புதிய அப்டேட்டுகள்
Read More
06 July 2022   |   Tech News
2021 ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இவைதான்!!
Read More
29 July 2022   |   Tech News
இந்தியாவில் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அறிமுகம்
Read More
29 July 2022   |   Tech News
Gmail ல் வந்துவிட்டது புது ( லே அவுட் - Layout ) அப்டேட்.
Read More
04 August 2022   |   Tech News
Gmail ல் வந்து குவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி ?
Read More
ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
https://blogbyte.in/blog-details/?cid=4&pid=47

LEAVE A COMMENT

+