A shortened version of weblog.

A shortened version of weblog.

இந்தியாவில் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அறிமுகம்

  • Tech News
  • 29 July 2022
  • 188 Views
  • Sathiyamoorthy V

கூகுள் நிறுவனம் உள்ளூர் நிறுவனங்களான டெக் மஹிந்திரா மற்றும் மும்பையைச் சேர்ந்த ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் தரவுகளுடன் 10 இந்திய நகரங்களுக்கு 360 டிகிரி இன்டராக்டிவ் பனோரமா அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நம் அன்றாட வாழ்க்கையில் கூகுளை எத்தனை முறை பயன்படுத்துகிறோம்?. எந்த தகவலாக இருந்தாலும் கூகுளில் தான் தேடிகிறோம். மருத்துவ தேவைக்கு கூட கூகுளில் தேடித்தான் பார்க்கிறோம். கூகுள் அந்தளவிற்கு பெரும் பங்கு வகிக்கிறது. முன்பெல்லாம் புது இடங்களுக்கு போய்வர தயங்குவோம், பயப்படுவோம். இப்போது, அது எல்லாம் கிடையாது. இருக்கவே இருக்கிறது கூகுள் மேப். நாம் எங்கு செல்ல வேண்டும், எந்த தெருவில் செல்ல வேண்டும், எவ்வளவு தூரம் செல்ல வேண்டும், எவ்வளவு நேரம் ஆகும் என அத்தனை தகவல்களையும் கூகுள் மேப்பில் நமக்கு கிடைத்து விடுகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.

இதற்கு ஒருபடி மேலாக, கூகுள் மேப்பின் அப்டேட் வெர்ஷனாக, கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதலில் 10 நகரங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக உள்ளூர் நிறுவனங்களிடம் தரவுகள் பெற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

டெக் மஹிந்திரா மற்றும் மும்பையைச் சேர்ந்த ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் ஆகியவற்றிடமிருந்து தரவுகள் பெற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் மேலும் 50 நகரங்களில் இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ என்றால் என்ன?

கூகுள் மேப் பயன்பாடுதான் இதுவும். கூகுள் மேப்பில் ஓர் இடத்திற்கு செல்ல நாம் இருக்கும் லொகேஷன், நாம் செல்ல வேண்டிய லொகேஷனை பதிவிட்டு வழி தேடி செல்வோம். அதேபோல் தான் இதுவும். நாம் செல்ல வேண்டிய, போக வேண்டிய இடத்தின் மொத்த தகவல்களையும் தந்து விடும்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ துல்லியமான தகவல்களை கொடுக்கும். நாம் செல்ல வேண்டிய இடத்தை தேடி, கிளிக் செய்தால் இடத்தின் அருகில் இருக்கும் சிறிய கடைகள், வீடுகள் முதல் என அனைத்தையும் தெளிவாக காண்பிக்கும். வழியில் உள்ள சாலையின் நிலையைக் கூட துல்லியமான தரவுகளுடன் காண்பிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

RELATED POST

12 July 2022   |   Tech News
ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
Read More
07 July 2022   |   Tech News
கார்கள், படகுகள், விமானங்களுக்கு இணையவசதி வழங்க ஸ்டார்லிங்கிற்கு ஒப்புதல்
Read More
06 July 2022   |   Tech News
டெலிகிராமின் அதிரடியான புதிய அப்டேட்டுகள்
Read More
29 July 2022   |   Tech News
Gmail ல் வந்துவிட்டது புது ( லே அவுட் - Layout ) அப்டேட்.
Read More
04 August 2022   |   Tech News
Gmail ல் வந்து குவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி ?
Read More
இந்தியாவில் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அறிமுகம்
https://blogbyte.in/blog-details/?cid=4&pid=49

LEAVE A COMMENT

+