A shortened version of weblog.

A shortened version of weblog.

கார்கள், படகுகள், விமானங்களுக்கு இணையவசதி வழங்க ஸ்டார்லிங்கிற்கு ஒப்புதல்

  • Tech News
  • 07 July 2022
  • 464 Views
  • Sathiyamoorthy V

கார்கள், படகுகள், விமானங்கள் உள்ளிட்டவற்றிற்கு இணையவசதி வழங்க எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கிற்கு அமெரிக்காவின் தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங், செயற்கைக்கோள் மூலம் இணையவசதி வழங்கி வரும் நிலையில், தங்கள் சேவையை நிலம், வான் மற்றும் கடலில் பயணிக்கும் வாகனங்களுக்கு விரிவாக்கும் வகையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உலக முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு இணையசேவையை வழங்க 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவ எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

ஸ்டார்லிங் (Starlink)

உலக பணக்காரர்களின் ஒருவரான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், SpaceX எனும் விண்வெளி ஆய்வு மையத்தையும் நடத்தி வருகிறார். இதன்மூலம் பல சேவைகளை அளிக்க நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, Starlink எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது. புவியின் தாழ்வான வட்டப்பாதையில் சிறிய செயற்கைக்கோள்களை நிறுவி, அதன்மூலம் இன்டர்நெட் சேவை வழங்குவதே இந்த நிறுவனத்தின் திட்டம். பல ஆயிரம் செயற்கைக்கோள்களை நிறுவி, தற்போது ஸ்டார்லிங் பிராட்பேண்ட் சேவை 32 நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்பாட்டில் உள்ளது.

ஸ்டார்லிங் இணையத்தின் வேகம் (Starlink Data Speed)

இணைய வசதி கிடைக்காத தொலைதூரப் பகுதிகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்குவதே ஸ்டார்லிங் நிறுவனத்தின் பிரதான திட்டம். 2021ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், அமெரிக்காவில் ஸ்டார்லிங் சேட்டிலைட் பிராட்பேண்ட் இன்டர்நெட்டின் பதிவிறக்க வேகம் (Download Speed) 104.97Mbps ஆகவும், அதன் பதிவேற்ற வேகம் (Upload Speed) 12.04Mbps ஆகவும் இருந்தது.

இது அமெரிக்காவில் உள்ள நிலையான நெட்வொர்க் வேகத்துடன் கிட்டத்தட்ட ஒத்ததாக உள்ளது. நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, SpaceX செயற்கைக்கோள்கள் மற்றும் தரை நிலையங்களை இன்னும் இந்த சேவையில் கூடுதலாக இணைக்க உள்ளது.

இதனால் நெட்வொர்க்கின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கும். நிலையான ஆப்டிக் ஃபைபர் இணைய வேகத்தை விட குறைந்ததாக இருந்தாலும், கேபிள்கள் கொடுக்கமுடியாத இடங்களில் கூட, வேகமான இணைய இணைப்பை பயனர்கள் ஸ்டார்லிங் சேவை மூலம் ருசிக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

RELATED POST

06 July 2022   |   Tech News
டெலிகிராமின் அதிரடியான புதிய அப்டேட்டுகள்
Read More
06 July 2022   |   Tech News
2021 ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இவைதான்!!
Read More
12 July 2022   |   Tech News
ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
Read More
29 July 2022   |   Tech News
இந்தியாவில் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அறிமுகம்
Read More
29 July 2022   |   Tech News
Gmail ல் வந்துவிட்டது புது ( லே அவுட் - Layout ) அப்டேட்.
Read More
கார்கள், படகுகள், விமானங்களுக்கு இணையவசதி வழங்க ஸ்டார்லிங்கிற்கு ஒப்புதல்
https://blogbyte.in/blog-details/?cid=4&pid=46

LEAVE A COMMENT

+