ஜி மெயிலின் முகப்பு பக்கத்தை மாற்றி நியூ லே-அவுட்டை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனம் புதிது புதிதாக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் பயனர்களை மகிழ்ச்சிபடுத்தும். கூகுள் பயனர்கள் ஏராளமானோர் உள்ளனர். கூகுளில் அத்தனை வசதிகள் உள்ளது. புதிது புதிதாக அறிமுகப்படுத்தியும் வருகின்றனர். கூகுள் மேப், கூகுள் மீட் என பல வசதிகள் உள்ளன.
சமீபத்தில் இந்தியாவில் 10 நகரங்களில் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அறிமுகப்படுத்தியது. முதல் முறையாக உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து தரவுகளை சேமித்துள்ளது. அந்த வகையில் தற்போது, ஜி மெயிலில் புது அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. ஜி மெயிலின் முகப்பு பக்கத்தை மாற்றி நியூ லே-அவுட்டை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அனைத்து பயனர்களுக்கு பயன்படுத்தும் படி வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜி மெயிலின் முகப்பு பக்கத்தில் கூகுள் மீட், சேட் மற்றும் ஸ்பேசஸ் போன்ற பிற கூகுள் அம்சங்களும் உள்ளடக்கியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த வசதியை குறைந்த பயனர்களுக்கு கொடுத்து சோதிக்கப்பட்டது. தற்போது அனைவரின் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூகுள் தெரிவித்துள்ளது.
ஜிமெயிலுக்கு சென்று, அதன் வலதுபுறத்தில் உள்ள கூகுள் குயிக் செட்டிங்ஸ் (Gmail Quick Settings) மெனுவிற்கு சென்று புதிய வசதியை பயன்படுத்த விரும்புகிறீர்களா? எனக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தை கிளிக் செய்தால், திரை புதுப்பிக்கப்பட்டு, புதிய வசதிக்கு மாற்றப்படும்.
இப்போது மீண்டும் பழைய லே-அவுட் வசதியை பெற வேண்டும் என்றால், அதேபோல், கூகுள் குயிக் செட்டிங்ஸ் சென்று பழைய லே-அவுட் வேண்டும் எனக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தை கிளிக் செய்தால், பழைய முகப்பு பக்கம் வந்துவிடும்.
இந்தாண்டு இறுதியில் மேலும் சில ஜிமெயில் வசதிகள், இமேஜி போன்ற வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதா கூறப்பட்டுள்ளது.
LEAVE A COMMENT